admk

Advertisment

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற வலியுறுத்தல்களுக்குப் பின்பு இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்சென்னையை அடுத்த வானகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீ வாரு எனும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கும் என்ற நிலையில் பல்வேறு அதிமுக தொண்டர்கள் சென்னை வானகரம் நோக்கிப் படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். நேற்று மாலையிலிருந்து பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருபுறமும் அதிமுக கட்சியின் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கியகட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு 100 மீட்டர் தூரத்திற்கு முன்போலீசார் அரண் அமைத்துள்ளனர். அங்கு நடத்தப்படும் சோதனைக்கு பிறகே பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்கு வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.