Advertisment

அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் விசாரணை!

ADMK FORMER MLA POLICE INVESTIGATION IN COIMBATORE

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் தனிப்படை காவல்துறையினர் ஐந்து மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

கடந்த 2017- ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து ஆகஸ்ட் மாதம் முதல் காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றன. இரண்டு மாதங்களாக எவ்வித விசாரணையும் நடைபெறாத நிலையில், விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது.

Advertisment

முதல்கட்டமாக, கோவையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள அலுவலகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஓட்டுநர் கனகராஜ் விபத்து மற்றும் கோடநாடு எஸ்டேட்டின் கணினி ஆபரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை ஆகிய இரு மரணங்கள் குறித்தும், தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோல், கடந்த 2017- ஆம் ஆண்டு ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

admk kodanadu police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe