Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது!

ADMK former minister R.P. Udayakumar arrested

Advertisment

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கடந்த 10 ஆம் தேதி (10.07.2024) அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருந்ததை எதிர்த்து இந்த போராட்டத்தை அதிமுக நடத்தியது. அதிமுகவினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே சமயம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் முன் அமர்ந்து பழைய முறையே தொடரும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என கல்லுப்பட்டி பேரையூர் வாகன ஓட்டிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும் கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே இது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உள்ளூர் மக்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கு அளிக்கப்படும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது.

ADMK former minister R.P. Udayakumar arrested

Advertisment

இதனையடுத்து சுமார் 10 மணி நேரமாக நடைபெற்று வந்த கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீசார் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெறுவதாகப் போராட்டக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை இடம் மாற்றம் செய்யக்கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யபட்டார். மேலும் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உட்பட50க்கும் மேற்பட்டோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த முற்றுகை போராட்டத்தின் போது அதிமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டட்து குறிப்பிடத்தக்கது.

admk madurai police TOLLGATE
இதையும் படியுங்கள்
Subscribe