Skip to main content

"திமுகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க.." - அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு!

Published on 13/02/2022 | Edited on 13/02/2022

 

jkk

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 56 ஆயிரம் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் காண்கிறார்கள். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது. திமுக, அதிமுக தரப்பில் பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்யது வருகிறார்கள்.

 

இந்நிலையில் கரூரில் பிரச்சாரம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது, " நாடாளுமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இன்னும் 27 அமாவாசை மட்டுமே திமுக ஆட்சி இருக்கும். அதன் பிறகு திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே திமுக ஆட்சியை பிடித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அதிமுகவுக்கு வாங்களியுங்கள்" என்று கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

 

சார்ந்த செய்திகள்