2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், தற்போது கட்சித் தொண்டர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
அடுத்து வரும் காலம் நமக்காக பூத்திருக்கிறது. தொண்டர்கள் உறுதியுடன் உழைக்க வேண்டும்.2021 ஆம் ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சி அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும். தொண்டர்கள் அனைவரும் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே... வெறும் எழுத்துகளால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்றுவிடாது. என் மக்கள் எதற்காகவும்யாரிடத்திலும்கையேந்தாதஎதிர்காலத்தை உருவாக்குவேன் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கி காட்டுகின்ற கடமை நம் முன்னே காத்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டிலும் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைத்து நிறைவேற்றி காட்டுவேன். இதுசத்தியம். அ.தி.மு.கவில் வம்சாவளி அரசியல் கிடையாது அதற்கு நானே சாட்சிஎனத் தெரிவித்துள்ளார்.