அதிமுக சார்பில், இன்று காலை 11:00 மணியளவில் பெரம்பூர் தொகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் திறந்து வைத்து மக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கிருணி பழம், ரோஸ் மில்க், மோர் போன்ற குளிர்பானங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி, வடச் சென்னை வடகிழக்கு மாவட்டம் பெரம்பூர் மேற்கு பகுதி 35வது மேற்கு வட்ட கழகச் செயலாளர் பா.இளங்கோவன் மற்றும் இ.டேனியல், சச்சின் மணி, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுகவின் சீயான் எஸ்.ஸ்ரீதர், ஜே.யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.