திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

meeting

Advertisment

Advertisment

இந்த பயிற்சி முகாம்மை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ பிச்சாண்டி கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவராக உள்ள திமுகவை சேர்ந்த கலைவாணியை சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளனர். அவரும் வருகை தந்து மேடையில் அமர்ந்துள்ளார்.

அமைச்சர் வந்தபோது, மேடையில் இருந்து சேர்மன் கலைவாணியை கீழே இறக்கி அமரவைத்துள்ளனர் அதிகாரிகள். தொடக்கவிழா முடியும் வரை அமைதியாக இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், நிகழ்ச்சி முடிந்தும் இதுப்பற்றி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அமைச்சர் கோபிச்சிக்குவார், அவரை மேடை ஏற்ற வேண்டாம் என்று சொன்னாங்க. அதனால் தான் கீழே இறக்கினோம் எனச்சொல்லியுள்ளனர். இதுயென்ன ஆளும்கட்சி விழாவா என்ன அமைச்சர் கோபித்துக்கொள்ள ? இது அரசு விழா, மக்கள் பிரதிநிதிகளுக்கான பயிற்சி விழா. இங்கு அவர் இருந்தால் கோபித்துக்கொள்வார் என்பது என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பினர்.

அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். திமுக சார்பில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தவர்களை அவமானப்படுத்துவதாக கூறி உள்ளாட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.