admk

தூத்துக்குடி, கயத்தாறு அதிமுக ஒன்றிய செயலாளர் வினோபாஜி. இவரது உறவினர் அந்தப்பகுதியில் டாஸ்மாக் பார் வைத்து நடத்தி வருகிறார். இன்று மிலாடிநபி என்பதால் அரசு டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்திருந்தது. இதனிடையே ஒன்றியசெயலாளர் வினோபாஜி வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி. முரளிரம்பாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisment

அவரது தகவலின் பேரில் சிறப்பு படை எஸ்.ஐ. ஜெயமணி தலைமையில் வினோபாஜியின் வீட்டை சோதனையிட்டுள்ளனர். அவரது வீட்டின் மாட்டு தொழுவத்தில் சுமார் 1008 மதுபாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது, அதைக்கைப்பற்றிய தனி படையினர் அவரிடம் விசாரித்ததில், இந்த மதுபாட்டில்கள், இன்று டாஸ்மாக் விடுமுறை என்பதால் விற்பனை செய்வதற்காக பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனி படையினர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை கயத்தாறு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கயத்தாறு போலிஸார் வினோபாஜியை கைதுசெய்தனர். மதுபாட்டில்களை அதிமுக நிர்வாகியே பதுக்கிவைத்து கைதுசெய்திருப்பது கயத்தாறு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisment