அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறார்.
முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க உள்ளார். மேலும், ஓ.பி.எஸ். கோரிக்கையின் படி அ.தி.மு.க.வுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். கூட்டாகபேட்டியளிக்க உள்ளனர்.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் செல்கின்றனர்.
இதனிடையே, சென்னையில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடனும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட கட்சியின் நிர்வாகிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.