Advertisment

ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் சொன்ன முதல்வர்!

admk chief o paneerselvam brother passed away

Advertisment

அதிமுககட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மூன்றாவது சகோதரர் ஓ. பாலமுருகன் (வயது 55) உடல்நலக்குறைவு காரணமாக, கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை முடிந்து நேற்று (13/05/2021) இரவு வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரென்று இன்று (14/05/2021)காலை அவர் காலமானார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள இல்லத்தில் இறுதி மரியாதைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு குடும்ப உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின்பிரமுகர்கள் உள்ளிட்டோர் ஓ. பாலமுருகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஓ. பன்னீர்செல்வத்தைதொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஓ. பாலமுருகனைஇழந்து வாடும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

passed away brother admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe