Skip to main content

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்..? - அக்., 7ம் தேதி அறிவிப்பு!

hjk

 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

 

கடந்த ஒரு மாதமாகவே அதிமுகவில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து அதிமுகவில் இதுதொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனை அடுத்த சில நாட்களாக அமைதியாக இருந்த இந்த பிரச்சனை கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் காரசாரமாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து இதுதொடர்பான விவரங்களைப் பேசி தீர்ப்பதற்காக இன்று செயற்குழு கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூட்டம் முடிந்து வெளியே வருகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்