ஆளுநருடன் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். நாளை சந்திப்பு!

admk chief eps and ops meet governor for tomorrow

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு நாட்கள் அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல், கொடநாடு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்த சதி நடப்பதாக தமிழ்நாடு அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை (19/08/2021) காலை 11.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பின் போது, ஆளுநரிடம் அவர்கள் மனு அளிக்க உள்ளதாகத்தகவல் கூறுகின்றன.

admk edappadi pazhaniswamy leaders
இதையும் படியுங்கள்
Subscribe