ADMK candidate who did not got even  single vote!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் 528 வாக்குகள் உள்ளன. இங்கு இஸ்லாமியர்களும் அதிகமாக உள்ளனர். இந்த வார்டில் திமுக இளைஞரணி பரூக், தி.மு.க.வில் வாய்ப்புக் கிடைக்காமல் அப்துல் கரீம், அ.ம.மு.க.வை சேர்ந்த சுயேட்சை பிருத்விராஜ், அதிமுக வேட்டாளர் இப்ராம்ஷா, நாம்தமிழர், லெனினிஸ்ட் மார்க்சிஸ்ட் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisment

இதில் சுயேட்சை வேட்பாளர் பிருத்விராஜ் 175 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரூக் 149 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் அப்துல் கரீம் 135 வாக்குகளும் பெற்றனர்.

Advertisment

இதே வார்டில் போட்டியிட்ட அதிமுக ந.செ. அப்துல்லாவின் தம்பியான இப்ராம்ஷா ஒரு ஓட்டுகள் கூட வாங்கவில்லை. இவரது குடும்ப ஓட்டுகளும் இதே வார்டில் இருந்தும்கூட யாரும் ஓட்டுப் போடவில்லை. வேட்பாளரும் கூட அவரது ஓட்டை வேறு வேட்பாளருக்கு அளித்துள்ளார்.

இது குறித்து ர.ர.க்கள் கூறும் போது, ‘திமுக வேட்பாளர் பரூக், அதிமுக ந.செ வின் மருமகன் என்பதால் வேட்பாளர் உள்பட அனைவருமே திமுக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். அதனால் தான் கட்சிக்கு இவ்வளவு அவமானம்’ என்றனர். அதே போல இதே வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளர் தர்மராஜும் ஒரு வாக்குகள் கூட வாங்கவில்லை.

Advertisment