Skip to main content

ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார் மனு!

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

ADMK CANDIDATE AND MINISTER JAYAKUMAR MEET TAMILNADU CHIEF ELECTION OFFICER

 

கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் திமுக பணப்பட்டுவாடா செய்வதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார் ராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமார்.  

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயக்குமார், "வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர். ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கூகுள் பே மூலம் நவீன முறையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். திருமங்கலம் ஃபார்முலாவை திமுக இன்னும் பின்பற்றுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி செயல்படக் கூடிய தனியார் தொலைக்காட்சியைத் தடை செய்ய வேண்டும். கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயகத்தைப் பணநாயகத்தால் வென்றுவிடலாம் என திமுக நினைக்கிறது" என குற்றம்சாட்டினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''என்னை கடத்தி மிரட்டினாங்க...''- திமுக போட்டி வேட்பாளர் போலீஸில் புகார்!

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

DMK rival candidate complains to police!

 

திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் திமுக 8 இடங்களும், அதிமுக 6 இடங்களில், சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்று இருந்தனர். திமுக சார்பில் பேரூராட்சி செயலாளர் செல்வராஜ் தாயார் பூசராணியை சேர்மன் வேட்பாளராக அறிவித்தது திமுக தலைமை.

 

நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலன்று பூசராணி தனக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து திமுகவின் 3வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரியும் பேரூராட்சி தலைவருக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தது திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இதுபற்றி மகேஸ்வரியிடம் திமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். மகேஸ்வரிக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள், திமுக கவுன்சிலர்களுடன் மல்லுக்கு நின்றனர். இந்த தகவல் வெளியே குவிந்திருந்த இரண்டு கட்சி தொண்டர்களுக்கு தெரியவந்ததும், காவல்துறையின் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்ததால் காவல்துறை தடியடி நடத்தினர்.

 

DMK rival candidate complains to police!

 

இதில் ஆளுங்கட்சியான திமுகவினரை போலீசார் விரட்டி விரட்டி தாக்கினர். அதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரண்டு தரப்பும் அடித்துக்கொண்டனர். இதில் மூவர் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கவுன்சிலர் மகேஸ்வரி காவல்நிலையத்தில், பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் ஒன்றை தந்துள்ளார். அதில், என்னை அதிமுகவினர் கடத்திச் சென்று அடைத்துவைத்து தேர்தலில் சேர்மனுக்கு போட்டியிட வேண்டும் என மிரட்டினார்கள் என புகார் தந்துள்ளார். இது உதயேந்திரம் பேரூராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.