ADVERTISEMENT

அதிமுக உட்கட்சித் தேர்தல்: ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல்! (படங்கள்)

12:14 PM Dec 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (03/04/2021) தொடங்கியது. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு இன்று (04/12/2021) காலை 11.30 மணிக்குச் சென்ற அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும், கூட்டாக தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

வேட்புமனு மீது நாளை (05/12/2021) பரிசீலனை நடைபெறுகிறது; நவம்பர் 8ஆம் தேதி அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குப் பொதுக்குழு உறுப்பினர்களுக்குப் பதிலாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். அதேபோல், அதிமுகவின் சட்டத்திட்ட விதிகள் மாற்றம் செய்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT