A.D.M.K. The ban on volunteers going to the office is over!

அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த ஜூலை 11- ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் கட்சியினரை ஒரு மாதத்திற்கு அனுமதிக்கக் கூடாது எனத் தடை விதித்தது.

Advertisment

இந்த தடை நேற்றோடு முடிவடைந்த நிலையில், இன்று முதல் கட்சியின் தொண்டர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவார்கள் என்று தகவல் பரவியது. ஆனால், மோதல் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடையாததாலும், சீரமைப்புப் பணிகள் நடைபெறாததாலும் தொண்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அ.தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என ஓ.பி.எஸ். வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், அலுவலக அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இப்போதைக்கு ஓ.பன்னீர்செல்வமோ, அவரது ஆதரவாளர்களோ அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு செல்ல வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.