சென்னை அடையாறுவில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஹோட்டலில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (17/07/2022) மாலை 04.00 மணிக்கு தொடங்கிய நிலையில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் முறை, அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி மற்றும் உட்கட்சி விவகாரங்கள் உள்ளிட்டவைக் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இக்கூட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 63 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது. தங்கமணி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர்ராஜு, சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.