"வெற்றி நடைபோடும் தமிழகம்" - அதிமுக நாளை முதல் பிரச்சாரம்!

admk announcement on election campaign

'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில், நாளை முதல் அ.தி.மு.க. பரப்புரையைத் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை (29.12.2020) முதல் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

'தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் திமுகவும்'தமிழகத்தைச் சீரமைப்போம்' என்ற பெயரில்மக்கள் நீதி மய்யமும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில்,அதிமுக 'வெற்றி நடைபோடும்தமிழகம்' என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. நாளை, முதல்வர் பழனிசாமி நாமக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

admk edappadi pazhaniswamy vetrinadai podum tamilagam
இதையும் படியுங்கள்
Subscribe