ADVERTISEMENT

ரூபாய் 1 கோடி கரோனா நிவாரண நிதி வழங்கிய அதிமுக!

02:16 PM May 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூபாய் 1 கோடி அளிக்கப்படும் என்று ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (17/05/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளிக்கப்படும். மேலும், அதிமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமும், கரோனா நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

இப்பெருந்தொற்றின் முதல் அலை மக்களைத் தாக்கிய நேரத்தில், கடந்த ஆண்டு அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசிடம் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இப்பொழுது அரசிடம் கட்சியின் சார்பில் வழங்கப்படுகின்ற 1 கோடி ரூபாய் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியம் ஆகியவற்றோடு, ஆங்காங்கே கட்சியின் உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு கொடைக்கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழி நின்று, மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT