admk alliance bjp leader pon radhakrishnan press meet

Advertisment

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி உள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி இல்லை; அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி உள்ளது. 2021-ல் தமிழகத்தில் ஆளுங்கட்சியை அங்கம் வகிக்கும் கட்சியாக பா.ஜ.க. இருக்கும்.கூட்டணி குறித்து மத்திய தலைமைதான் முடிவு செய்யும்.விரைவில் முதலமைச்சரை சந்திக்கவுள்ளேன்" என்றார்.

'அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை ஏற்பவர்கள்தான் கூட்டணியில் இருக்க முடியும்' என அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.