A.D.M.K. Adjournment of the General Assembly case!

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ய வேண்டும் என்றும்முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

Advertisment

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

அதில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு மட்டுமே தடை கோரி இருப்பதாகவும், தீர்மானங்களை எதிர்த்து அல்ல என்றும்,எனவே, மேல்முறையீட்டு மனுக்களைதள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (21/11/2022) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பும், அவகாசம் வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பும் கோரின.

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், அனைத்து தரப்பும் தங்கள் வாதங்களை, ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கி வழக்கு விசாரணை வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.