Skip to main content

அதிமுக பிரமுகருக்கு வெட்டு; வேதாரண்யத்தில் பரபரப்பு

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

தாணிக்கோட்டகம் அதிமுகவைச்சேர்ந்த காளிதாசன் என்பவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் பலத்தக்காயத்தோடு சரிந்து விழுந்தவரை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

அ

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு காவல் சரகம் தாணிக்கோட்டகத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவர் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் ஆதரவாளராக இருந்துவருகிறார். அந்த பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளைகளுக்கு எதிராக பேசிவருபவர். மானங்கொண்டான் ஏரியை தூர்வாருகிறோம் என்கிற பெயரில் நிதி ஒதுக்கி, அந்த நிதியையும், ஏரியில் உள்ள மணலையும் கொள்ளையடிப்பதாக சிட்டிங் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மணல் கடத்தல்காரர்களையும் தொடர்ந்து கண்டித்து குடைச்சல் கொடுத்துவந்தார். அதோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கும் விசாரணையில் இருந்துவருகிறது.

 

இந்தநிலையில் தாணிக்கோட்டகம் சின்ன தேவன் காட்டிலிருந்து குலாலர் காட்டிற்குச் செல்லும்  வழியில் காளிதாஸனை இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் அரிவாளால் தலை மற்றும் தோள்பட்டையில்  வெட்டியதில் பலத்த காயத்தோடு சரிந்தார். படுகாயத்தோடு கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

 

இதுகுறித்து வாய்மேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.  காளிதாசனுக்கு பலதரப்பிலும் எதிர்ப்புகள் இருந்துள்ளது. வெட்டியவர்கள் மணல்குவாரி அதிபர்களா, அல்லது அதிமுகவில் உள்ள எதிர்ப்பாளர்களா, அல்லது சொந்த பகையா என விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லீரலில் இருந்து அகற்றப்பட்ட 'சமையல் கத்தி'... எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

Liver - Delhi - AIIMS - Kitchen -Knife - Doctors

 

புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இளைஞர் ஒருவருக்கு கல்லீரலில் இருந்த 20 செமீ நீளமுள்ள கத்தி அகற்றப்பட்டிருப்பது பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஜூலை 12 அன்று வயிற்று வலி மற்றும் பசியின்மை காரணமாக எய்ம்ஸ் மருந்துவமனையில் 28 வயதான இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக எக்ஸ்-ரே செய்யப்பட்டு வயிற்றுப் பகுதி பரிசோதிக்கப்பட்டது. அப்போது கல்லீரலில் சுமார் 20 செ.மீ நீளமுள்ள கத்தி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் தாஸ் கூறுகையில் "இந்த அறுவைசிகிச்சை மிக நுட்பமாகச் செய்யப்பட்டது. சிறு பிழையானாலும் அந்த இளைஞன் உயிர்பிழைப்பது கடினமாகியிருக்கும். ஏனெனில் அந்தக் கத்தியானது பித்தப்பைக்கு மிக அருகில் இருந்தது. எனவே அந்தக் கத்தியைக் குடல் சுவர் வழியாகத் துளையிட்டு அகற்றினோம். அந்த இளைஞன் கத்தியை விழுங்கி ஒன்றரை மாதம் இயல்பாக இருந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இப்படி ஒரு சம்பவத்தைப் பார்ப்பது இதுதான் முதல்முறை. அவருக்குப் போதைப்பொருள் பழக்கம் இருந்துள்ளது. அதனால் போதைப்பொருள் கிடைக்காத விரக்தியில் கத்தியை விழுங்கி தண்ணீரைக் குடித்துள்ளார். எனவே அவருக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

நாகை தொகுதி எம்.பி மீது கத்தி வீசிய நபர்கள் கைது!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

நாகை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்த நாகை எம்.பி செல்வராஜின் வாகனத்தை வழி மறித்த நபர்கள், கூச்சலிட்டதோடு எம்.பி மீது கத்தியை வீசியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் செல்வராஜ். இவர் நாகை தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் உள்ள ஸ்தியம்பள்ளி காளியம்மன் கோயில் முன்பு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிக் கொண்டிருந்தார்.

 

 Nagai lok sabha MP block persons arrested for throwing knife

 

அப்போது வாகனத்தின் முன்பு குடிபோதையில் நின்றிருந்த மூன்று பேர்  எம்.பி செல்வராஜை பார்த்து கூச்சலிட்டனர். அந்த நபர்கள் "இங்க உள்ள தண்ணீர் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியவில்லை என்றும், உங்களால் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க முடியவில்லை என்றும், ஆனால் நன்றி மட்டும் தெரிவிக்க வந்திட்டுங்க." என கூச்சலிட்டனர். அதோடு நிற்காமல் கையில் வைத்திருந்த கத்தியையும் வீசினர். அந்த கத்தி எம்.பி செல்வராஜ் மீது படாமல் அருகில் விழுந்தது.


அதிர்ச்சியடைந்த போலீசாரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் எம்.பியை தாக்க முயன்ற நபர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது எம்.பி மீது கத்தி வீசிய காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.