Published on 08/08/2023 | Edited on 08/08/2023

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன், தற்போது திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக உள்ளார். இந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் சீனிவாசனின் உடலில் கட்டி இருப்பதாகவும், அதனை அகற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.