ADVERTISEMENT

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி விளக்கம்!

01:24 PM Oct 11, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (11/10/2021) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு காலியிடங்களே இருக்காது. மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும் ஒதுக்காவிட்டாலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடங்கப்படும். பயோ டெக்னாலஜி படிப்புக்கு நிதி ஒதுக்கக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதவுள்ளார். பொறியியல் கல்லூரிகளில் 7.5% உள் இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கல்லூரிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது; மீறி வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 7.5% இடஒதுக்கீட்டின் மூலம் பொறியியல் படிப்பில் இதுவரை 5,970 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 25ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT