Advertisment

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை; கால அவகாசம் நீட்டிப்பு!

Admission of students in engineering colleges; Deadline extension

Advertisment

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. அதே சமயம் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்காக இதன் மூலம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6 தேதி (06.05.2024) முதல் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அதில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். தற்பொழுது மாணாக்கர்களின் கோரிக்கைகளை ஏற்றுத் தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை (10.06.2024) மற்றும் நாளை மறுநாள் (11.06.2024) என இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.

இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து, பதிவு கட்டணம் செலுத்தி தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரியப்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Engineering
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe