Admission Rally in Corporation School

திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளி பாண்டமங்கலம் தெற்கு பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. இதை வட்டார வள மைய மேற்பார்வையாளர்மல்லிகா பெரியநாயகி மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை லீலா லெட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்

Advertisment

உதவி ஆசிரியைகள், எஸ்.எம்.சி. உறுப்பினர்கள், பி.டி.ஏ. உறுப்பினர்கள், ஐ.டி.கே தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர். 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை துவங்கப்பட்டது. எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி சேர்க்கை நடைபெற இருப்பதால் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் பெற்று பயனடையுமாறு தலைமை ஆசிரியை லீலா லட்சுமி கேட்டுக் கொண்டார் முடிவில் உதவி ஆசிரியை தஸ்லீம் பல்கீஸ் நன்றி கூறினார்.

Advertisment