Advertisment

ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி! 

Admission to Governor L. Ganesan Hospital!

Advertisment

ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம்ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர் தமிழகம் வந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று (01/10/2022) காலையில் ஆளுநர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆளுநர் இல.கணேசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆளுநர் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனையைச் சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

ஆளுநர் இல.கணேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும்தகவல் வெளியாகியுள்ளது.

hospital Chennai governor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe