அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை; இணையதளம் தொடக்கம் 

Admission to Annamalai University; Website launch

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டின்மாணவர் சேர்க்கைக்கானஇணையதளத்தினை மே 11 ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், புலமுதல்வர்கள், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், மாணவர் சேர்க்கை பிரிவின் துணை இயக்குநர் பாலபாஸ்கர், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், துணைவேந்தருக்கான நேர்முக செயலா் பாக்கியராஜ் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பாடப்பிரிவுகள் மற்றும் விண்ணப்பங்கள் பற்றிய விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.06.2023 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe