Advertisment

‘அட்மின்’, ‘நான் அவன் இல்லை’ - எச்.ராஜாவை கலாய்த்த விஜய்சேதுபதி

h

Advertisment

ன்றை பேசிவிட்டு பின்னர் அதிலிருந்து பின் வாங்குவதில் பிரபலமானவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. ’அது என் குரலே இல்லை. எடிட் செய்துவிட்டார்கள் என்று எச்.ராஜா கூறிய பின்னர் ‘நான் அவன் இல்லை’ என்று ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததும், அது ‘அட்மின்’ செய்த வேலை என்றும் புது ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர் எச்.ராஜா. எஸ்.வி.சேகரும் இந்த ட்ரெண்ட்டை பின்பற்றினார். கேரள வெள்ள நிவாரண முகாமில் படுத்து தூங்கிய அமைச்சரும் ’அது அட்மின்’ என்று இந்த ட்ரெண்ட்டை பின்பற்றினார்.

இந்நிலையில், எச்.ராஜாவினால் உருவாகியிருக்கும் இந்த ட்ரெண்ட் குறித்து கமெண்ட் அடித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும், சோதனை நடக்கவில்லை என்றும் இரண்டு விதமான செய்திகள் உலவி வந்த நிலையில் விஜய்சேதுபதியே செய்தியாளர்களை சந்தித்து, அதற்கு விளக்கம் அளித்தார்.

Advertisment

அப்போது, ’’பேசிவிட்டு நான் பேசவில்லை என்பதும், அட்மின் தான் பதிவிட்டார் என்று சொல்வதுதான் இப்போது ட்ரண்ட். அதுமாதிரி என்னுடைய வீட்டில் ரெய்டு நடக்கவில்லை, என் வீடு போல் செட் போட்டு நடந்திருக்கலாம் என்று சொல்லமாட்டேன். வீடு மற்றும் அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் வந்தது உண்மைதான். ஆனால் , சோதனை நடைபெறவில்லை. ஆய்வு செய்யத்தான் அதிகாரிகள் வந்தனர். அதுவும், கணக்கு விவகாரத்தில் ஆடிட்டர் செய்த சிறு குழப்பத்தினால் வந்த விளைவுதான் இது. குழப்பம் நீங்கியதும் அதிகாரிகள் சென்றுவிட்டனர்’’ என்று கூறினார்.

Vijay Sethupathi H Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe