சொத்துக்குவிப்பு வழக்கில்நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்த சசிகலா இன்று (27.01.2021) விடுதலை செய்யப்படுவார் எனதெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அவரதுசிறைதண்டனை முடிந்ததற்கான ஆவணங்களைப்போலீசார்சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில்சசிகலாவுக்குப் பேனர் வைத்த நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுப்ரமணிய ராஜா என்ற அவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் - இபிஎஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு களங்கம், அவப்பெயர்உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.