/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_557.jpg)
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தனது பதவியைத்தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர்,கடந்த 2014ஆம் ஆண்டு,உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்,லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தி,நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘புகார்கள் குறித்து நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், ராஜேந்திரபாலஜி மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ராஜேந்திரபாலாஜி தரப்பில், ‘இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை என அரசு முடிவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று,இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)