Adjournment of case against CV Shanmugam

Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசும் போது தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பற்றியும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர்கள் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (06.11.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கை நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.