ADVERTISEMENT

விண்ணில் பாயத் தயாராகும் ஆதித்யா எல் 1; மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

10:10 PM Aug 31, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே சமயம் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்கிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆயிரத்து 475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1 இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் ஆதித்யா விண்கலத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை மாலை (01.09.2023) முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. முன்னதாக விண்ணில் பாயத் தாயாராக இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம், இதனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் ஆகியவற்றின் புகைப்படங்களை இஸ்ரோ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT