Advertisment

விண்ணில் பாயத் தயாராகும் ஆதித்யா எல் 1; மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Aditya L1 preparing to fly in the sky Fishermen are prohibited from going to sea

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

அதே சமயம் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்கிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆயிரத்து 475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1 இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் ஆதித்யா விண்கலத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை மாலை (01.09.2023) முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. முன்னதாக விண்ணில் பாயத்தாயாராக இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம், இதனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் ஆகியவற்றின் புகைப்படங்களை இஸ்ரோ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

sea fisherman ISRO sun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe