Skip to main content

சரித்திரச் சிறப்புகளைக் கொண்ட சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா ரத்து!!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
adithapasu festival cancel

 

இந்த யுகம் தோன்றிய கல்ப கோடி காலத்திற்கு முன்பு கௌரவம் காரணமாக சைவம் பெரியதா, வைணவம் பெரியதா, என்று இரு சமயப் பற்றாளர்களுக்குள்ளே கலகம். ஆயிரக்கணக்கானோர் வெட்டியும் குத்தியும், குருதியாறு பாய பலியானார்கள். ரத்த ஆற்றை கட்டுப்படுத்த வேண்டிப் பதறிய முப்பது முக்கோடி தேவர்களும், காக்கும் கடவுளான சர்வேஸ்வரனைச் சரணடைந்து, பக்தர்களைக் காத்தருளும்படி முறையிட்டனர்.

 

பக்தர்களைக் காக்கும் பொருட்டு தன் உடலில் ஒருபுறம் சிவனாகவும், மறுபுறம் அரியாகவும் ஒருசேர உருவெடுத்து பக்தர்களுக்கு காட்சியளித்த சிவபெருமான், சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்ற ஒற்றுமையே உலகுக்கு உணா்த்த, சைவ வைணவப் போர் முடிவுக்கு வந்தது.

 

அண்ட சராட்சரத்தையும் ஆளுகின்ற சர்வேஸ்வரனின் இந்த அரிய காட்சியைத் தனக்கும் காட்டியருளுமாறு உமையவள் பார்வதி தேவியாரும் பகவானை வேண்ட, அவரின் ஆக்ஞைபடி, பூலோகத்தின் பொதிகையடிப் புன்னைவனத்தில் தேவியாரும் பல்லாண்டு காலம் தவம் செய்ததை மெச்சிய எம்பெருமான், தன்னில் சங்கரரும், மறுபுறம் நாராயணராக ஒருசேர அமையப்பெற்ற (அரியும் சிவனும்) உருவாய் பார்வதி அம்மைக்கு காட்சியளித்தார். இந்த அரிய அருட்காட்சி வைபவம், பொதிகையடிப் புன்னைவனத்தில் நடக்கப்பெற்றதால் அந்த இடம் சங்கரநாராயணர் கோவில் என்றானது.

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் என்றழைக்கப்படும் நகரில் ஆடிமாத பௌர்ணமியில் ஆண்டவனின் அருட்காட்சி நடக்கப்பெற்றதால் அது ஆடித்தபசு காட்சி என்று சரித்திரத்தில் கல்வெட்டாய்ப் பதிவானது.

 

சிவபெருமானே உமையவள் பார்வதியம்மைக்கு காட்சி கொடுத்த அந்த அரிய ஆடித்தபசு காட்சி தினத்திற்கு முன்பாக பத்து விதமான மண்டகப்படித்தாரர்களால் பத்து நாட்களாக பகவானுக்கு சிறப்பாக பூஜைகள், தீப ஆராதனைகள், சிறப்பு அபிஷேகங்கள் என்று நடத்தப்படுவதையும் இறுதியாக பதினோறாம் நாளான சிவபெருமான், பார்வதியம்மைக்கு காட்சி கொடுக்கும் ஆடித்தபசு விழாவைக் காண வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். பல நூறு ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது ஆடித்தபசு காட்சி. அந்தத் திருவிழாவிற்கான நாளைய கொடியேற்றமும் ஆக 2ல் நடக்கிற ஆடித்தபசு காட்சி திருவிழாவும் கரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆலய நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது பக்தர்களிடம் அளவு கடந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர கரோனாவின் திருவிளையாடல், இனி எதையெல்லாம் தாக்க காத்திருக்கிறதோ என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.