மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று அழகர் கோவில் தேரோட்டத் திருவிழா. ஒவ்வொரு ஆடி மாதமும் கொண்டாடப்படுகிற நிலையில் தற்போது ஆடி மாத அழகர் கோவில் தேரோட்டம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ள அழகரின் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மக்கள் கூட்டம் அலைகடலெனத் திரளத் திருவிழாவானது தற்போது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.