மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நீர் திறப்பு 600 கனஅடியில் இருந்து 800 கனஅடியாக அதிகரிப்பு. அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9500 கனஅடியில் இருந்து 9800 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 89.01 டிஎம்சியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது.