Advertisment

வெடிகுண்டு மிரட்டலால் முதல்வர் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு!

cm

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. உடனே மிரட்டல் விடு்த்த நபர் குறித்து விசாரணை நடைபெற்றது.

மேலும், முதல்வர் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. ஆனாலும், வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமியின் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசாரின் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச்சேர்ந்த புவனேஷ்என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Palanisamy bomb house chief minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe