publive-image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து வைத்தார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் வாயிலாக விவசாயிகளின் நெல் மூட்டைகளை நேரடியாக அரசு கொள்முதல் செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. நெல்லின் தரத்தை பொறுத்து விவசாயிகளுக்கு அதிக விலையில் நேரடியாக பணம் வழங்கப்படுகிறது. ஏஜெண்டுகள் தலையீடு இல்லாததால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. எனவே விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வழங்கி பயன்பெற வேண்டும்" என்றார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் திட்டக்குடி வட்டாட்சியர் ரவிச்சந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் காவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.