Advertisment

அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு

 Additional responsibility for Udayanidhi

திமுகவில் உதயநிதி ஸ்டாலின்அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கைஅமைச்சர்களாலும் கட்சி நிர்வாகிகளாலும்கட்சித் தலைமையிடம் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 14.12.2023அன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

Advertisment

அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறை ஒதுக்கப்பட்டிருந்தது. உதயநிதி அமைச்சரானதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்தது.

Advertisment

இந்த நிலையில்,அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் பொறுப்பு வகிக்கும் சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறைக்கு திறன் மேம்பாட்டுக் கழகம் மாற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்நலத்துறை வசம் இருந்ததிறன் மேம்பாட்டுக் கழகம் சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

minister TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe