7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி கூட்டுறவு சங்க பதிவாளராக சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கப் பதிவாளராக நியமிக்கப்பட்டிருந்த செந்தில்ராஜன்நியமனம் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத் நீடிப்பார் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.