பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியான சர்கார் படத்தின் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றதுதொடர்பான வழக்கில்தியேட்டர்கள் கட்டணம் வசூல் பற்றிய அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாற்று எழுந்து மகேந்திர பாண்டி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம்தான் திரையரங்குகளில் வசூலிக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் இரண்டு சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில், அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை எனக்கூறி மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த நீதிமன்ற அவமதிப்புவழக்கில், சர்கார் திரைப்படம் வெளியான நவ 6 முதல் 16ஆம் தேதி வரை திரையரங்குகளில் எவ்வளவு கட்டணம் வசூலாகியுள்ளது என்பது தொடர்பான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6-ஆம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம்.