நீட் தேர்வுக்காக தமிழகத்தில் 28 மையங்களும் புதுச்சேரில் ஒரு மையமும் இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதனால், வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை இருந்துவருகிறது.
இதனால், கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கூடுதல் மையங்களை அமைக்க தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில் மையங்களை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பதை இந்தாண்டு முதல் செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.