Advertisment

அத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடுகள்.. தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி!!

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Advertisment

Additional arrangements to visit the athivarathar... Interview with Chief Secretary Shanmugam !!

அதில் நோயுற்றோர், முதியோர்கள் அவரை தரிசிக்க பேட்டரி கார் வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதேபோல அத்திவரதர்வைபவத்திற்காக செய்யப்பட்டுள்ள கூடுதல் ஏற்பாடுகள் குறித்தும் அவர் விளக்கினார்.

Advertisment

பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக 1000 தன்னார்வலர்கள் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் கூடுதலாக தண்ணீர் பாட்டில், பிஸ்கட் போன்றவற்றை வழங்க உத்தரவிட்டுள்ளோம். வரிசையில் நிற்பவர்கள்ஓய்வெடுக்க நாற்காலி வசதிகள் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஐபி தரிசனத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு கோபுரம் பகுதியில் கூடுதல் முகாம்களை அமைக்க உத்தரவிட்டுள்ளோம். வெளி மாவட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை தூய்மைபணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தி உள்ளோம் என கூறினார்.

kanjipuram athivarathar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe