/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mtc-art_1.jpg)
சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (11.02.2024) காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே சுமார் 04.15 மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 15 ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 6 ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ஒரு ரயிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 15 ரயில்கள், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை, செல்லும் 5 ரயில்கள், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ஒரு ரயிலும், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ஒரு ரயிலும் என மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மின்சார ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றுரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் எனசென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10.00 மணி முதல் மாலை 03.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, 18 ஏ வழித்தடத்தில் பிராட்வேயில் இருந்து அண்ணா சாலை வழித்தடத்தில் தாம்பரத்திற்கு கூடுதலாக 60 பேருந்துகளும், 18 ஜி வழித்தடத்தில் பிராட்வேயில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும் 18 ஏசிடி வழித்தடத்தில் கிண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு கூடுதலாக 10 பேருந்துகளும், பி 18 வழித்தடத்தில் கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு கூடுதலாக 30 பேருந்துகளும், ஈ 18 வழித்தடத்தில் பிராட்வேயில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு கூடுதலாக 20 பேருந்துகளும், ஜி 18 வழித்தடத்தில் தி.நகர் இருந்து கூடுவாஞ்சேரிக்கு கூடுதலாக 100 பேருந்துகளும் என மொத்தம் 150 பேருந்துகள் இயக்கப்ப்ட உள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)