தொண்டர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் என திருவாரூர் கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்திய கூட்டத்தில் மு.க அழகிரி பேசினார்.
திமுக தலைவர் கலைஞரின் மறைவை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, அதற்கான இடைத்தேர்தலை வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை செய்துவருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20180923_114327_resized.jpg)
இந்தநிலையில் திருவாரூர் தொகுதியில் மு,க,அழகிரி போட்டியிடப்போவதாக தகவல்கள் பரவிக்கிடந்தன, அவரது ஆதரவாளர்களைக்கொண்டு திருவாரூரின் நிலவரம் குறித்தும் ஒரு வாரகாலம் ஆய்வு செய்யவைத்திருந்தார். அந்த ஆய்வின் முடிவிலும் எனக்கு நம்பிக்கையில்லை, நானே செல்கிறேன், அங்கு மக்களிடம் தனக்கு வரவேற்பு எப்படியுள்ளது என்பதை அறிந்த பிறகே முடிவெடுக்கப்போகிறேன் என தனது ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார்.
அதன்படியே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, கலைஞருக்கு திருவாரூரில் புகழஞ்சலி கூட்டம் நடத்தனும், அப்படியே தனக்கு இருக்கும் ஆதரவு குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மனநிலையோடு புகழஞ்சலி கூட்டத்தை 23 ம் தேதி கூட்ட திட்டமிட்டு அறிவித்திருந்தார். அறிவித்தபடியே இன்று காலை மதுரையில் இருந்து பத்து காரில் புகழஞ்சலி கூட்டத்திற்கு வந்த முக அழகிரி, வரும்வழியில் காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருக்கு பேரூந்து நிலையம் ரவுண்டானாவில் குவிந்திருந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் அவரது கார் மீது மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நேதாஜி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இறுதியாக தெற்கு விதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றார். மேடையில் வைக்கபட்டிருந்த கலைஞரின் திரு உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு அழகிரியின் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வீர வாள்பரிசளித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20180923_125109_resized.jpg)
அங்கு பேசிய அழகிரி " திருவாரூர் தெற்கு வீதியில் தான் நான் பிறந்தேன், இங்கு நான் சுற்றி சந்தோசம் அடையாத இடங்கள் இல்லை. நான் பிறந்ததும் எனது தந்தை கலைஞர் பெரியாரை அழைத்துவந்து எனக்கு பெயர்வைத்தார்."அப்போது பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவாக எனக்கு அழகிரி என பெயர் வைத்தனர். அதோடு பெரியாரின் பகுத்தரவு பட்டரையில் வளர்ந்த கலைஞர் என்னையும் அப்படியே உறுவாக்கினார். எனது திருமனம் சீர்திருத்த திருமணமாக இருக்கவேண்டுமென நினைத்தார், அவர் விருப்ப படியே தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த பெண்ணையே பெரியார் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார்.
எத்தனையோ முறை திருவாரூருக்கு வந்திருக்கிறேன். ஆனால் தற்போது கலைஞர் இல்லாமல் வந்திருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு திருவாரூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் நாகை மாவட்டம் கீழ்வேளுரில் உள்ள வேளாண் கல்லூரிக்கும் கலைஞரின் பெயரை வைக்க முன்வரவேண்டும், கலைஞரால் கொண்டுவரப்பட்ட திருவாரூர் அருகே வடகண்டத்தில் உள்ள மத்திய பல்கலைகழத்திற்கும் கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கவுள்ளேன்."என தனது பேச்சை சுருக்கமாக முடித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20180923_111507_resized.jpg)
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி ,"தனி கட்சி தொடங்கும் என்னம் எண்ணமில்லை.விசுவாசிகளும், பொதுமக்களும் முடிவு செய்தால் தேர்தலில் போட்டியிடுவேன். தமிழகத்தில் ஆட்சி நடப்பதாகவே தெரியல, மாறி மாறி இரண்டு கட்சிகளும் போராட்டம் மட்டுமே நடத்துகின்றனர். தன்னை திமுகவில் இனைைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்று கொள்ள நான் தயார். அவரோடு சேர்ந்து என்னால் முடிந்த கட்சிப்பனிகளை செய்வேன். ஆனால் அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. நான் தேர்தலில் போடிட்யிட்டால் அனைத்துகட்சி தலைவர்களுமே தனக்கு ஆதரவு தருவார்கள். மக்கள் விரும்பினால்,இடைத்தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன்," என முடித்துக்கொண்டார்.
அழகிரியோடு நிகழ்ச்சியில் துரைதயாநிதி அழகிரி மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)