Advertisment

பப்ஜி மோகத்தால் ஏற்பட்ட மரணம்... சோகத்தில் குடும்பத்தினர்கள்!

addict of pubg leads to wrong decision

திருச்சி சோமரசம்பேட்டை சாந்தாபுரம் ஐயப்ப நகரைச்சேர்ந்தவர் சங்கர். திருச்சி பருப்புக்காரத் தெருவில் லால் மிட்டாய் எனும்ஸ்வீட் ஸ்டால் நடத்திவருகிறார்.இவரது மகன் பாலஹரிநாத் (16),திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். பாலஹரிநாத் ஆன்லைன் வகுப்பில் அதிக கவனம் செலுத்தாமல்,பப்ஜி கேம் விளையாடுவதிலேயே அதிக நேரம் செலவிட்டிருந்துள்ளார்.

Advertisment

இதன் காரணமாக, தற்போது வௌியான ரிசல்ட்டில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், அவரை சங்கர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாலஹரிநாத், தனது அறைக்குச் சென்று தாழிட்டுக்கொண்டுள்ளார். மதியம் சாப்பிடவும் வௌியில் வராததால், வீட்டில் இருந்தவர்கள் அவரை அழைத்துள்ளனர். அப்போதும் எந்தவித சலனமும் இல்லாத காரணத்தால், அச்சமடைந்து கதவைஉடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் பயந்தது போலவே, பாலஹரிநாத் துாக்கில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

incident pubg trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe