Adavadi in traffic congestion; Police action

Advertisment

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகஇருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடும் காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது திருச்சியில் இருசக்கர வாகனத்தின் முன்புறம் பட்டாசுகளை வைத்து வெடித்தபடி இளைஞர்கள் சிலர் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் பைக் வீலிங் செய்தகாட்சி இணையத்தில் வைரலானநிலையில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாமக்கல்லில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தில் இளைஞர்ஒருவர்வண்டியை ஓட்ட இரண்டு பேர் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு சென்ற காட்சி இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல் கடைவீதி பகுதியிலிருந்து துறையூர் சாலை சந்திப்பில் காவல் நிலையம் வழியாக இருசக்கர வாகனத்தில்சென்ற இளைஞர்கள்ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்தனர். இந்த வீடியோ காட்சிகளில் தெரிந்த வாகன எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கிஷோர் என்ற இளைஞரைகைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மற்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.