
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.யாஷிகா ஆனந்த் சென்ற கார் நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில்அவருடன் காரில்சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us