'ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை விஜயலட்சுமி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாத்திரைகளை விழுங்கி அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன உளைச்சலில் இருப்பதாகநடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது தற்கொலை முயற்சி மேற்கொண்டு, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.